முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேகமான வளர்ச்சியை எட்டி வரும் இந்தியா அமெரிக்காவுக்கு கடும் போட்டியாக அமையும்: ஒபாமா

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூன்.- 26 - இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மிக வேகமான வளர்ச்சியை எட்டி வருகின்றன. எனவே அமெரிக்கா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு கடும் போட்டியாக இவ்விரு நாடுகளும் விளங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த நிதி சேகரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிபர் ஒபாமா கூறும் போது, 

இந்தியாவும், சீனாவும் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் தங்களது இலக்கை எட்டுவதற்காக வேகமாக முன்னேறி வருகின்றன. கடந்த காலங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த அமெரிக்க சூழல் இப்போது இல்லை. சாதாரண அமெரிக்க ஊழியரின் வருமானம் பெருமளவு குறைந்து பொருட்களின் விலையும் குறைந்து விட்டது. மருத்துவம் மிகுந்த செலவு பிடிக்கும் விஷயமாகி விட்டது. 

இதனால் உலக அரங்கில் நமது புகழ் மங்கி விட்டது. இரண்டரை ஆண்டுகளில் அமெரிக்கா குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டி உள்ளது. இருப்பினும் இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன. இன்னமும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கல்வி துறையில் சீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. உலகிலேயே மிக அதிகளவில் பட்டதாரிகள் வெளிவரும் நாடாக அமெரிக்காவை உருவாக்க வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் சாத்தியமாக்க வேண்டும் என்று ஒபாமா கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்