முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக். பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது: அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஜூன்.- 26 - இந்தியா-பாகிஸ்தான் இடையே இஸ்லாமாபாத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டத்தை தனித்து உறவை சீர்படுத்தும் முயற்சியாக இருநாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை இரண்டு நாட்கள் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபாமாராவ் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீர் மற்றும் இருநாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது விசா வழங்கும் முறையை எளிதுபடுத்துவது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிரூபமாராவ், காஷ்மீர் பிரச்சினைக்கு துப்பாக்கி குண்டுகள் மூலம் தீர்வுகாண முடியாது என்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சல்மான் குர்ஷீத், பயங்கரவாதத்தை ஒழிக்க இருநாடுகளும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தை திருப்தி அளிப்பதாக உள்ளது. இதன் விளைவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலான்து நேற்றுமுன்தினம் வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இருநாடுகளிடையே பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம் என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் நுலாந்து கூறினார். இருநாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் இருந்தது. இதன்விளைவாக இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் அடுத்தமாதம் பேச்சுவார்த்தை நடத்த வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்