முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதாவை தயார் செய்ய இனி சமூக ஆர்வலர்கள் இல்லை

திங்கட்கிழமை, 27 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.27 - எதிர்காலத்தில் மசோதா தயாரிக்கும்போது சமூக ஆர்வலர்களை பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். நாட்டில் ஊழல் மற்றும் கறுப்புப்பணத்தை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கையாக வருகின்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இந்த லோக்பால் மசோதாவுக்கான வரைவு மசோதைவை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு ஒன்றை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 5 பேர் மத்திய அரசு பிரதிநிதிகளும் அண்ணா ஹசாரே உள்பட 5 பேர் சிவில் பிரதிநிதிகளும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மசோதாவுக்கான விதிமுறைகளை உருவாக்குவதில் மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் சிவில் பிரதிநிதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. லோக்பால் மசோதாவில் பிரதமர் மற்றும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளையும் உள்ளடக்க வேண்டும் என்று சிவில் உறுப்பினர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் அவர்களை உள்ளடக்க அரசு பிரதிநிதிகள் மறுத்து வருகின்றனர். 

இந்தநிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எதிர்காலத்தில் மசோதாக்களை தயார் செய்வதில் சமூக ஆர்வலர்களை அனுமதிக்க மாட்டோம் என்றார். லோக்பால் வரைவு மசோதா தயாரிப்பது தொடர்பாக சிவில் உறுப்பினர்களுடன் இதுவரை 9 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். ஆனால் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை. வருகின்ற 3-ம் தேதி லோக்பால் மசோதாவை இறுதி செய்ய அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அதில் இருதரப்பு கருத்துக்களும் எடுத்துரைக்கப்படும் என்றார்.

இதற்கிடையில் வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரத்தை தொடங்கப்போவதாக அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்