முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா மனைவி வருமான வரி அலுவலகத்தில் ஆஜர்

சனிக்கிழமை, 25 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி,ஜூன்.- 25 - முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி மற்றும் உறவினர்களிடம் நேற்று திருச்சி வருமானவரி அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி நிர்வாக இயக்குநர் சரத்குமார் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ராசா கைது செய்யப்பட்டபோது சி.பி.ஐ பெரம்பலூர் மற்றும் திருச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர்களிடம் ஊழல் தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது ராசாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். கைப்பற்ற பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை துணை இயக்குநர் ஆல்பர்ட் மனோகரன் தலைமையில் திருச்சி, பெரம்பலூரில் விசாரணை நடைபெற்றுவந்தது. இது தொடர்பாக ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் சகோதரர் ராமச்சந்திரன், சகோதரி மகன் பரமேஸ்குமார்,  சகோதரி மகள் மற்றும் ஆடிட்டர்களான பிரான்சிஸ், முத்துக்குமாரசாமி, சுரேஷ்குமார் ஆகியோரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். அதன்படி நேற்று காலை அந்த 7 பேரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராமச்சந்திரன், பரமேஸ்குமார் ஆகிய 3 பேரிடம் வருமான வரித்துறை அலுவலகத்தில் தனி அறையில் விசாரணை நடத்தினர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago