முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் சாய்னா நெக்வாலுக்கு ரன்னர்ஸ் அப் பட்டம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஜகர்த்தா, ஜூன். - 28  - இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டி யில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் சீன வீராங்க னை யிகான் வாங் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய வீராங்கனை சாய்னா நெக்வாலுக்கு ரன்னர்ஸ் அப் பட்டம் கிடைத்தது.  நடப்பு சாம்பியனான சாய்னா நெக்வால் இந்தத் தொடரில் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடைசி சுற்றில் மோசமாக ஆடி தோல்வியைத் தழுவி னார். 

கடந்த ஒரு வார காலமாக தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வந்த இந்தோனேசிய ஓபன் சூப்பர் தொடர் பேட்மிண்டன் போட்டி நேற்று டன் அமர்க்களமாக முடிவுக்கு வந்தது. 

சூப்பர் தொடரான இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்ன ணி வீராங்கனைகள் களத்தில் குதித்தனர். இதற்காக அவர்கள் தீவிர பயிற்சியுடன் அங்கு குவிந்து இருந்தனர். 

இதில் பங்கேற்ற உலகின் தலைசிறந்த வீராங்கனைகள் பேட்மிண்டனி ல் தங்களது முத்திரையை பதித்தனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்தனர். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் நட்சத் திர வீராங்கனையான சாய்னா நெக்வாலும், சீனாவின் முன்னணி வீராங்கனையான யிகான் வாங்கும் பலப்பரிட்சை நடத்தினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றின் முடிவில் சீன வீராங்க னை யிகான் வாங் அபாரமாக ஆடி, 12 - 21 , 23 - 21, 21 - 14 என்ற கே ம் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 

இந்தப் போட்டி சுமார் ஒரு மணி மற்றும் 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னதாக நடந்த முதல் கேமில் சாய்னா நிறைய தவறுகலைச் செய்த போதிலும், துவக்கம் முதலே புள்ளிகளைப் பெற்று முன்னி லை பெற்று கேமைக் கைப்பற்றினார். 

பின்பு நடந்த 2 -வது கேமில் சீன வீராங்கனை சுதாரித்து ஆடினார். இத னால் அவர் முன்னிலை பெற்றார். சாய்னா அவரை விரட்டி வந்த போதிலும், அவரது முன்னிலயை தடுக்க முடியவில்லை. இறுதியில் சீனா வீராங்கனை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் கேமை வென்றார். 

அடுத்து நடந்த 3 -வது கேமிலும் சீனா வீராங்கனையின் ஆதிக்கம் தொடர்ந்தது. சாய்னா செய்த தவறுகளை அவர் தனக்கு சாதகமாக்கி முன்னிலை பெற்றார். இறுதியில் 7 புள்ளிகள் வித்தியாசத்தில் கேமை கைப்பற்றினார். 

இதில் வெற்றி பெற்ற சீன வீராங்கனை உலக தரவரிசையில் 3 -ம் நிலை வீராங்கனையாவார். இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்த சாய் னா இந்தப் போட்டியில் 4 -ம் நிலை வீராங்கனையாவார். சாய்னா இங்கு கடந்த 2009 மற்றும் 10 -ம் ஆண்டுகளில் பட்டம் வென்று இருக் கிறார். 

இறுதிச் சுற்றில் இரண்டு வீராங்கனைகளும் பரபரப்பாக ஆடியதால் ஏராளமான தவறுகளைச் செய்தனர். முதல் கேமில் சீன வீராங்கனை யிகான் வாங் 12 தவறுகளைச் செய்தார். 2 -வது கேமில் இந்திய வீராங் கனை சாய்னா 10 தவறுகளைச் செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago