முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராக்கெட் வீசுவதாக பாகிஸ்தான் மீது ஆப்கான் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 29 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

காபூல், ஜூன்.29 - பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டின் மீது 450 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 36 பேர் பலியானார்கள் என்று ஆப்கான் அதிபர் கர்சாய் குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கான் எல்லையோர கிராமங்களின் மீது பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 வாரங்களாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 12 சிறுவர்கள் உள்பட 36 பேர் பலியாகினர். இந்த பிரச்சனையை கர்சாய் ஈரானில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் எழுப்பினார். அப்போது இந்த மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் இருந்தார். கடந்த 3 வாரங்களில் 450 ராக்கெட்டுகளை பாகிஸ்தான் ராணுவம் எங்கள் நாட்டின் மீது வீசி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த தாக்குதலை நடத்தவில்லையென்றால் வேறுயார் நிகழ்த்தியது என்பதை பாகிஸ்தான் தெளிவுபடுத்தவேண்டும் என்று உறுதிபட தெரிவித்தார். இதனிடையே பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகையில் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளை எதிர்த்து ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக ராக்கெட்டுகள் எல்லை தாண்டி ஆப்கான் பகுதிக்குள் விழுந்திருக்கலாம் என்றஉ குறிப்பிட்டார். இதனையடுத்து பேசிய ஆப்கான் ராணுவ அதிகாரி முகமது ஜாகீர் கூறுகையில், ஆப்கான் மக்களை கொன்றதற்கு பழி வாங்காமல் விடமாட்டோம். இனி எங்கள் நாட்டின் மீது ஒரு ராக்கெட் வந்து விழுந்தாலும் தக்க பதிலடி கொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago