முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரம் திமுக நகராட்சியை கண்டித்து திமுக வினரே உண்ணாவிரதம்...!

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

ராமேஸ்வரம் பிப் 28 - ராமேஸ்வரம் திமுக நகராட்சியை கண்டித்தும் மார்கெட்டை தனியாருக்கு ஏலம் விடபட்டதை கண்டித்து திமுக வினர் இன்று (பிப் 28) உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளனர் . மேலும் திமுக கவுன்சிலர்கள் ராஜிணாமா செய்ய உள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் தெரிவித்தார். ராமேஸ்வரம் திமுக நகராட்சி தலைவராக ஜலில் உள்ளார் இவரது தந்தை ஜான் பாய், திமுக நகர் செயலாளராக உள்ளார். நகராட்சி தலைவர் ஜலில் மீது ஏற்கெனவே பல்வேறு ஊழல் குற்றச்சாற்றப்பட்டு ஏதிர் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திமுக நகராட்சி தலைவர் ஜலில் அரசு மருத்துமனை நர்சுகளை அவுதூராக பேசியதாகவும் பெண்மையை கொச்சை படுத்தி பேசியதாக வழக்கும், தனியார் சம்பந்தமான இடத்ஏதை அபகரிக்க முயன்று அவரது டீக்கடையை அடித்து நொருக்கிய வழக்கும் கீழக்கரை யை சேர்ந்த பெண்ணை கற்பழித்த வழக்கும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவரை தாக்கிய வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சிக்கு சொந்தமான மார்கெட்டை தனியாருக்கு ஏலம் விடக்கூடாது என 2002 -ல் மாவட்ட கலெக்டராக இருந்த விஜய குமார் உத்தரவிட்டார் . 

ஆனால் உத்தரவை மீறி மார்கெட்டை தனியாருக்கு ஏலம் விட்டு நகராட்சிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு நகராட்சி தலைவர் தான் பொறுபப்பு எனவும் நகராட்சி கவுன்சிலருக்கு தெரியாமலேயே மார்கெட் ஏலம் குறித்து தீர்மானம் ஏற்றி பெறும் பணத்தை நகராட்சி தலைவர் கொள்ளையடித்ததாக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மார்கெட்டை தனியாருக்கு ஏழம் விடபட்டதை கண்டித்தும் திமுக இளைஞரணி சார்பில் இன்று மார்கெட் முன்பு. உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளனர். இதில் திமுக நிர்வாகிகளும் திமுக கவுன்சிலர்களும் கலந்து கொள்கின்றனர். பின்னர் அன்று மாலை திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து நகராட்சி ஆணையிடம் கடிதம் அளிக்க உள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் சங்கர் தெரிவித்தார். திமுக நகராட்சி தலைவர் மற்றும் நிர்வாகத்தை கண்டித்து திமுக வினரே உண்ணாவிரதம் போராட்டமும் கவுன்சிலர்களின் ராஜினாமா செய்

தியும் மாவட்ட திமுக வினரிடையே பெறும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்