முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 நாட்களில் பாஸ்போர்ட் - திட்ட இயக்குனர் பேட்டி

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.1 - போலீஸ் ஆய்வுச்சான்றிதழை வேகமாக வழங்கினால் மேலும் விரைவாக பாஸ்போர்ட்களை வழங்க முடியும் என்று பாஸ்போர்ட் சேவை திட்ட இயக்குனர் தெரிவித்தார். பாஸ்போர்ட் சேவையை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் 77 சேவை மையங்களை அமைக்க டி.சி.எஸ். (டாடாகன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனத்துடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் 12 இடங்களில் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று மதுரை மற்றும் நெல்லையில் சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது.  இதற்கான விழா மதுரை கோச்சடை ரோட்டில் உள்ள சேவை மையத்தில் நேற்று நடந்தது.  மதுரை நெல்லை சேவை மையங்களை திறந்து வைத்து பாஸ்போர்ட் சேவை திட்ட இயக்குனர் சோப்டி பேசுகையில், தற்போது 60 லட்சம் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை  கையாளுகிறோம். நாடு முழுவதும் சேவை மையங்கள் முழுமையாக செயல்படும் போது, இந்த எண்ணிக்கை ஒரு கோடியை தொடும். மக்களுக்கு விரைவாகவும், எளிமையாகவும் உடனுக்குடன் பாஸ்போர்ட் வழங்கும் வகையில் இந்த சேவை மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. 

போலீஸ் ஆய்வு சான்றிதழ் விரைவாக வழங்கினால் இன்னும் வேகமாக பாஸ் போர்ட்களை 15 நாட்களில் வழங்க முடியும்.அடுத்த மாதத்தில் சென்னையில் 3 இடங்களிலும், கோவை, டெல்லி, வைசாக் ஆகிய இடங்களில் தலா ஒன்று என மொத்தம் 6 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட உள்ளன. புதுச்சேரியில் வரும் 2012 ஆண்டு ஜனவரியில் திறக்கப்படும் என்றார். 

விழாவில் பாஸ்போர்ட் சேவை திட்ட முதன்மை ஆலோசகர் கோலோக் சிம்லி, மதுரை டி.ஆர்.ஓ. முருகேஷ், போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேலு, சங்க தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago