முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிடர் கல்லூரி விடுதி பணிகள்: அமைச்சர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - சென்னை வில்லிவாக்கத்திலுள்ள ஆதி திராவிடர் நலக் கல்லூரி விடுதிகளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந.சுப்ரமணியன் 29.06.2011 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சருடன் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர், அரசு செயலர் ஆ.சு.ஜீவரத்தினம், ஆதிதிராவிடர் நல ஆணையர் பொ.சிவசங்கரன், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கி. விஜயராஜ்குமார் மற்றும் சென்னை ஆதி திராவிடர் நல அலுவலர் ஜி.தாமோதரன் ஆகியோரும் உடன் இருந்தனர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களிடம் தங்களது குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார். மாணவர்கள் தெரிவித்த குறைகளை உடனடியாக களைய உரிய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். விடுதியில் அனுமதி பெறாமல் தங்கியிருந்த வெளியாட்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மீண்டும் இவர்கள் இங்கு அனுமதி பெறாமல் தங்கியிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இது போன்ற நடைமுறைகள் நடைபெறாமல் கண்காணிக்கவும், விடுதியில் அடிப்படை வசதிகள் குறிப்பாக கழிப்பிட வசதி சரிவர பராமரிக்கப்படவும் விடுதி காப்பாளருக்கு அறிவுரை வழங்கினார். 

வில்லிவாக்கம் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியினை ஆய்வு செய்த அமைச்சர், பள்ளியின் மேற்கூரை சிதலமடைந்திருந்ததை பார்வையிட்டு, உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தினார். மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி தலைமை ஆசிரியரின் அறையில் வகுப்புகள் நடத்தவும் தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்