முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் குழந்தைகளுக்கான ஆம்புலன்சு சேவை தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை,1 - தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பச்சிளம் குழந்தைகளுக்கான 108 இலவச ஆம்புலன்சு சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய் தெரிவித்தார். எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுகான இலவச ஆம்புலன்சு சேவையை தொடங்கி வைத்த அவர் கூறுகையில், குழந்தைகள் பிறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையும், 108 ஆம்புலன்சு சேவையை செயல்படுத்தி வரும் இ.எம்.ஆர்.ஐ. நிறுவனமும் இணைந்து இரண்டு பச்சிளம் ஆம்புலன்சு சேவையை தொடங்கியுள்ளன. 

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட தமிழகத்தின் 40 மையங்களில் பச்சிளம் குழந்தை 108 ஆம்புலன்சு சேவை விரைவில் தொடங்கப்படும். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பிரச்சினை ஏற்படாமல் உயிர் காக்கப்பட்டு விட்டால் சிசு மரண விகிதத்தை பெருமளவு குறைத்து விட முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்