முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மணப்பெண்ணின் 70 பவுன் நகை திருட்டு

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.1 - சென்னை ஐஸ் அவுஸில் கள்ளச்சாவி தயாரித்து மணப்பெண்ணின் 70 பவுன் நகையை சமர்த்தியமாக திருடிய மணமகளின் தோழியையும் அவருக்கு உதவிய நண்பரையும் போலீசார் கைது செய்து நகை மீட்டனர். இதுபற்றி விவரம் வருமாறு:-

நெல்லையை சேர்ந்தவர் பஸ்தலாயாஷ்மின் (24). இவருக்கும் சென்னையை சேர்ந்த என்ஜினீயர் ஒருவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இதற்காக யாஷ்மினின் குடும்பத்தினர் சென்னை ஐஸ் அவுசில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

யாஷ்மின் உறவினர்கள் பலர் ஐஸ்அவுஸ் பகுதியில் வசித்து வருகிறார்கள். திருமணத்துக்கு 2 நாள் முன்பு யாஷ்மியின் 65 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.  விசாரணையில் யாஷ்மின் தோழியும், உறவினருமான ஷகினா (23). நகையை திருடியது தெரிய வந்தது. திருமணத்துக்கு 2 நாட்கள் முன்பு ஷகினா வீட்டுக்கு யாஷ்மின் சென்று உள்ளார். அப்போது யாஷ்மின் வைத்திருந்த பீரோ சாவியை வாங்கி பார்த்த ஷகினா அதைவைத்து கள்ளச்சாவி தயாரித்துள்ளார்.

அதை வைத்து நகையை திருடியது தெரியவந்தது. அதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடம் இருந்து மீட்கபட்ட நகைகளை போலீசார் இன்று யாஷ்மினிடம் ஒப்படைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago