எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.1 - சென்னை ரூ.3 லட்சம் பணத்துக்காக குழந்தையை கடத்திய ஆட்டோ டிரைவர் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை சைதாப்பேட்டை சாரதி நகர் முரசரி சாலையைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செந்தமிழ் செல்வி. இவர்களுக்கு 3 வயதில் அஸ்வினி என்ற மகளும், 1 1/2 வயதில் மணிராஜ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 16-ம் தேதி அஸ்வினி, மணிராஜ் இருவரும் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர்.
திடீரென மணி ராஜ் காணாமல் போய் விட்டான்.
இது குறித்து முருகன் சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது போரூர் மந்தவளி தெரு, பகுதியைச் சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர் வீட்டில் மணிராஜ் இருப்பது தெரியவந்தது. சத்தியமூர்த்தி ஆட்டோ டிரைவராவார். அவரிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்திய போது, குழந்தை கடத்தலின் பின்னணியில் ஒரு கும்பல் செயல்படுவது தெரிய வந்தது.அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க தென் சென்னை போலீஸ் இணைக் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் தெய்வசிகாமணி மேற்பார் வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார், ஆட்டோ டிரைவர் சத்தியமூர்த்தியிடம் விசாரித்த போது, ராஜஸ்தான் டிரஸ்ட் எனும் அமைப்பில் உள்ள இந்திரா என்பவர் ரூ.10 ஆயிரம் கொடுத்து குழந்தை மணிராஜை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டதாக கூறினார்.
இதையடுத்து போலீசாரின் பார்வை இந்திரா மீது திரும்பியது. அவரிடம் விசாரணை நடத்திய போது தான், குழந்தை மணிராஜ் கடத்தலின் பின்னணியில் உள்ள முழு விவரம் தெரிய வந்தது.
அது வருமாறு:
ஈரோட்டை சேர்ந்தவர் சிவசலாபதி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு திருமணம் நடந்து நீnullண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. எனவே அவர்கள் 1 வயது முதல் 2 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தை ஒன்றை தத்து எடுக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் சென்னை வந்து ஆதரவற்ற குழந்தைகள் வளர்க்கப்படும் பல்வேறு டிரஸ்டுகளில் தங்களது பெயரை பதிவு செய்து வைத்திருந்தனர்.
அசோக் நகரில் உள்ள லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ்டில் வேலை பார்த்து வரும் ரோஸ்மேரியையும் சிவசலாபதி அணுகினார். அவர் தங்கள் டிரஸ்டில் குழந்தை இல்லை என்று சொல்லி, ராஜஸ்தான் டிரஸ்ட்டில் வேலை பார்த்து வரும் இந்திராவை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதனால் சிவசலாபதிக்கும் இந்திராவுக்கும் பழக்கம் அதிகரித்தது. அதன் பேரில் சிவசலாபதி, இந்திராவிடம் எனக்கு உடனே குழந்தை வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். அதற்கு இந்திரா, ஆதரவற்ற இல்லம், டிரஸ்ட் மூலம் குழந்தையை தத்து எடுக்க வேண்டுமானால் சட்ட நடவடிக்கைகளுக்காக சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். உடனே குழந்தை வேண்டும் என்றால், எங்கிருந்தாவது எடுத்து வந்து தான் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிவசலாபதி அதற்கு சம்மதித்துள்ளார். எங்கிருந்தாவது எனக்கு குழந்தை கிடைத்தால் போதும் என்று கூறியுள்ளார். அவரது அவசரத்தை புரிந்து கொண்ட இந்திரா, குழந்தையை கடத்தி வந்து ஒப்படைக்க 3 லட்சம் ரூபாய் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். nullண்ட பேரத்துக்குப் பிறகு 2 1/2 லட்சம் ரூபாய் கொடுக்க சிவசலாபதி சம்மதித்தார்.
இதையடுத்து இந்திரா குழந்தை கடத்தும் திட்டத்துக்கு வியூகம் வகுத்தார். ராஜஸ்தான் டிரஸ்ட் மூலம் வங்கி கடன், ஆட்டோ வாங்கிக் கொடுத்து உதவி செய்த வகையில் பலரை இந்திராவுக்கு தெரியும். தன்னிடம் உதவி பெற்ற மேற்கு மாம்பலம் புதுத் தெருவைச் சேர்ந்த நாகம்மாள் என்பவரை இந்திரா நாடி, விஷயத்தை கூறினார்.
இதையடுத்து குழந்தை கடத்தலுக்கான திட்டத்தை இந்திரா, நாகம்மாள், அவரது கணவர் நாராயணன், மகன் வெங்கடேசன், இந்திராவின் தோழிகள் சுமதி, கலா, இலக்கியா ஆகியோர் வகுத்தனர். கடத்தல் சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதியில் வசித்து வந்த சுமதிக்கு, பக்கத்தில் சாரதி நகரில் முருகன்செந்தமிழ்செல்விக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருப்பது தெரியும். அந்த குழந்தையை கடத்தலாம் என்று முடிவு செய்தனர்.
இதற்காக சிவசலாபதியிடம் அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் முன்பணம் பெற்றனர். திட்டமிட்டப்படி கடந்த 16-ம் தேதி வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மணிராஜை, கலாவும், இலக்கியாவும் சேர்ந்து சாமர்த்தியமாக கடத்தினார்கள். பிறகு மணிராஜை அவர்கள் இந்திராவிடம் ஒப்படைத்தனர்.
இந்திரா, குழந்தை மணிராஜை, சிவசலாபதியிடம் காட்டினார் அந்த குழந்தையை வளர்க்க சம்மதித்த சிவசலாபதி குழந்தையை இங்கேயே இருக்கட்டும் ஈரோட்டுக்கு போய் விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி சென்றார். மீட்பு குழந்தையை தனது வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பாத இந்திரா, போரூர், மந்தவளி தெருவில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சத்திய மூர்த்தியிடம் கொடுத்து வைத்திருக்க கூறினார்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் திறமையாக துப்பு துலக்கி போரூரில் சத்தியமூர்த்தி வீட்டில் இருந்த குழந்தை மணிராஜை மீட்டனர். குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு குழந்தை கடத்தலில் தொடர்புடையவர்கள் வேட்டையாடப்பட்டனர். குழந்தை கடத்தலுக்கு வியூகம் வகுத்து கொடுத்த இந்திரா, அதை செயல்படுத்திய நாகம்மாள், மற்றும் சுமதி ஆகிய 3 பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர்.
குழந்தை மணிராஜ் அணிந்திருந்த நகைகள் மற்றும் உடைகள் நாகம்மாளிடம் இருந்து மீட்கப்பட்டன. இதையடுத்து நேற்று குழந்தை மணி ராஜை, பெற்றோர் முருகன், செந்தமிழ்செல்வியிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி பாராட்டினார்.
பிறகு கமிஷனர் திரிபாதி நிருபர்களிடம் கூறுகையில், குழந்தை மணிராஜ் கடத்தப்பட்டதும் அவனது புகைப்படத்துடன் கூடிய விளம்பர நோட்டீஸ் ஏராளமாக ஒட்டினோம். அதை பார்த்த ஒருவர் அந்த நோட்டீசில் இருந்த நம்பருக்கு தகவல் கொடுத்தார். இதன் மூலம் குழந்தை மணிராஜை மீட்க முடிந்தது என்றார்.
அப்போது கூடுதல் கமிஷனர் தாமரை கண்ணன் இணை கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், சங்கர், செந்தாமரை கண்ணன், உளவுப் பிரிவு இணைக் கமிஷனர் நல்லசிவம் ஆகியோர் உடன் இருந்தனர். குழந்தை கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இந்த கடத்தல் கும்பல் சென்னையில் வேறு எங்காவது குழந்தைகளை கடத்தினார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.