முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரிபுரா மாநில கவுன்சில் தேர்தல் - இடதுசாரி முன்னணி வெற்றி

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

அகர்தலா,பிப்.28 - திரிபுரா மாநிலத்தில் சுயாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஆளும் இடதுசாரி முன்னணி அமோக வெற்றிபெற்றுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா மாநிலமும் ஒன்றாகும். இங்கு இடதுசாரி முன்னணி அரசு ஆட்சியில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் திரிபுரா மாவட்ட கவுன்சில் கிராம கமிட்டிக்கு தேர்தலும் மற்றும் 73 கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும் சுயாட்சி மாவட்ட கவுன்சில் அல்லாத 7 பஞ்சாயத்துக்களுக்கும் கடந்த 24-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தல் நடைபெற்ற 527 கிராம கமிட்டிகளில் 461-ல் இடதுசாரி முன்னணியும் 56 கிராம கமிட்டிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் சுயேட்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே 9 கிராம கமிட்டிகளில் இடதுசாரி முன்னணியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் 73 கிராம பஞ்சாயத்துக்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 65-ல் இடதுசாரி முன்னணியும் 9 கிராம பஞ்சாயத்துக்களில் மட்டும் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. 

பல இடையூறுகளுக்கும் சதிகளுக்கும் இடையே நாங்கள் கடந்த முறை நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதைவிட இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளோம் என்று எதிர்க்கட்சி தலைவர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார். இந்த தடைவையும் நாங்கள் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளபோதிலும் ஓட்டுக்கள் குறைந்துள்ளன. மேலும் குறைந்த அளவிலேயே கிராம பஞ்சாயத்துக்களில் வெற்றிபெற்றுள்ளோம். இதற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து ஏதாவது குறைகள் இருந்தால் அதை போக்கி அடுத்த தடவை இதைக்காட்டிலும் அதிக இடங்களில் வெற்றிபெறுவோம் என்று இடது கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பிஜன் தார் பெருந்தன்மையுடன் கூறினார். இதுதான் அரசியலுக்கு அழகு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்