முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலக்காடு ரயில்வே டிவிஷனில் பாதுகாப்பு

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

கோழிக்கோடு,பிப்.28 - பாலக்காடு ரயில்வே டிவிஷன் பகுதிகளில் ரயில்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. 

ஓடும் ரயில்களில் கொலை, கொள்ளை போன்ற கிரிமினல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகள் பயணம் செய்யும்போது அச்சத்துடன் இருக்கிறார்கள். அதுவும் கேரள மாநிலம் பாலக்காடு ரயில்வே டிவிஷனில் கிரிமினல் குற்றங்கள் கொஞ்சம் அதிக அளவில் நடப்பது தெரியவந்துள்ளது. இதனையொட்டி அந்த டிவிஷனில் ரயில்களுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு வசதியை பெருக்கி பலப்படுத்த ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது என்று அந்த ரயில்வே டிவிஷனல் மேலாளர் எஸ்.கே.ரெய்னா தெரிவித்துள்ளார். 

கோழிக்கோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பயணிகளுக்கும் ரயில்வே ஊழியர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்புடன் பயணம் 2011 ரயிலை துவக்கி வைத்து ரெய்னா பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் பாலக்காடு ரயில்வே டிவிஷனில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறையை பலப்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது என்றார். பாலக்காட்டில் இருந்து மங்களூர் வரையுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பேசும் சத்தம் கேட்கும்படி எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனர், வாகன சோதனை கண்ணாடி,பயணிகளை சோதிக்கும் ஸ்கேனர், கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் தானியங்கி வாகன ஸ்கேனிங் கருவி ஆகியவைகள் பொருத்தப்படும்.

 பாலக்காடு ரயில்வே டிவிஷனில் பாதுகாப்பு நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். கேரள மாநிலத்தில் ஓடும் ரயில்களில் கிரிமினல் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக கூறப்படுவது குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரெய்னா, பொதுமக்களுக்கு கேரள போலீசாரும் ரயில்வே பாதுகாப்பு படையினரும்தான் முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார். கோழிக்கோடு பிராந்தியத்தில் இரண்டு ரயில்தண்டவாளங்கள் அமைக்கும் பணி வரும் மார்ச் மாதத்திற்குள் முடியும் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்