முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் தேர்வு

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜூலை, 2 - அகில இந்திய செஸ் சம்மேளன தலைவராக ஜே.சி.டி. பிரபாகர் எம்.எல்.ஏ. தேர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் துணைதலைவராக பணியாற்றி வருபவர் வில்லிவாக்கம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான ஜே.சி.டி. பிரபாகர். விளையாட்டுத்துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு விளையாட்டு சங்கங்களிலும் பொறுப்பு வகித்து வருகிறார்.  சமீபத்தில் நடந்த அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு சென்னையில் நடந்த பதவியேற்பு விழாவில் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்தார்.

அகில இந்திய செஸ் சம்மேளன நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு:

தலைவர்-ஜே.சி.டி.பிரபாகர்(தமிழ்நாடு),  துணை தலைவர்கள்-ஜி.பாஸ்கர்(அந்தமான்-நிகோபர்), திப்யேந்து பருவா(ஜார்கண்ட்), சேகர் சந்திர சாகு(ஒரிசா), ஏ.பக்தவச்சலம்(புதுச்சேரி), ஏ.நரசிம்ம ரெட்டி(ஆந்திர பிரதேசம்), பிரதீப் ஜெயின்(உத்தராஞ்சல்).

பொது செயலாளர்-பரத் சிங் சவுகான்(டெல்லி).

இணை செயலாளர்கள்-பி.கே.குப்தா(ராஜஸ்தான்), எம்.எஸ்.குருராஜ்(கர்நாடகா), கே.முரளிமோகன்(தமிழ்நாடு), அதுல் குமார்(ஜம்மு காஷ்மீர்), அரிந்தம் பருவா(அசாம்), நந்த் கிஷோர் ஜோஷி(மத்திய பிரதேசம்).

பொருளாளர்-ஆர்.எம்.டோங்ரே(மகாராஷ்டிரா).

இந்த பதவியேற்பு விழாவில் பேசிய ஜே.சி.டி.பிரபாகர், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், முந்தைய தலைவர் விட்டுச்சென்ற பணிகள் செம்மையுடன் தொடர்ந்து நடத்துவேன் என்றும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்