முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இட ஆக்கிரமிப்பு வழக்கில் கோர்ட்டில் மதுரை மேயர் சரண்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஜூலை.2 - இட ஆக்கிரமிப்பு வழக்கில் மதுரை திமுக மேயர் தேன்மொழி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரண் அடைந்து முன் ஜாமீன் பெற்றார். மதுரை மதிச்சியம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக மதுரை மாநகராட்சி திமுக மேயர் தேன்மொழி, மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின், திமுக நிர்வாகி சுந்தர்ராஜன் அவரது மனைவி ரங்கம்மாள் உள்பட 13 பேர் மீது வக்கீல் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில் விஜிலன்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மேயர் தேன்மொழி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    விஜிலென்ஸ் அலுவலகத்தில் தினமும் ஆஜராகி 2 வாரத்திற்கு கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மேயருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று மதுரை ஜேஎம் 2 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்து முன் ஜாமீனை மேயர் தேன்மொழி பெற்றுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்