முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தூர் எக்ஸ்பிரஸ் திருமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

திருமங்கலம், ஜூலை.02 - சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் திருமங்கலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். திருமங்கலம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகள் குழுவுடன் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் நேற்று ஆய்வு மேற்கொம்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் திருமங்கலம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதி, காத்திருப்பு அறை வசதி, பிளாடபாரங்கள் சீரமைப்பு, மின் விளக்கு வசதிகள் விரைவாக செய்து தரப்படும். ரயில் நிலையத்தை சுற்றியுள்ள புதர்கள் அகற்றப்பட்டு ரயில்வே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும். விமான நிலைய சாலையில் உளஅள ரயில்வே கேட்டில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைப்பதற்காக வாகன சர்வே நடத்தப்பட்டு 3 மாதங்களுக்குள் தமிழக அரசிடம் பேசி முடிவு செய்யப்படும். திருமங்கலம் பகுதி மக்களின் வசதிக்காக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருமங்கலத்தில் நின்று செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகள் 6 மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் கோயல், உதவி கோட்ட மேலாளர் வெங்கடசுப்பிரமணியம், அதிகாரி ஹேசிங்சந்த், பொறியாளர் ரவிச்சந்திரன், நிலைய மேலாளர் சுந்தர்ராஜன் மறஅறும் பேரையூர் பேரூராட்சி தலைவர் குருசாமி, காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேம்பு வேந்தன், மாணவர் காங்கிரஸ் தலைவர் மைதீன் பாட்சா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜராஜன், சண்முக ராஜேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்