முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.2.50 லட்சம் கல்வி கட்டணம்

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை, 2 - சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணம் கடந்த ஆண்டைப்போலவே ரூ.2.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கல்வி கட்டண குழு தலைவர் நீதிபதி பாலசுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,645 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பும் பணிகள் நேற்று துவங்கி நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள 10 தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள இடங்களில் 767 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்.மாணவர்களுக்கு கிடைக்கும். மருத்துவக்கல்வி இயக்ககம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும்.

இந்த 10 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் கடந்த ஆண்டு கல்விக்கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு இந்த தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று தனியார் கல்லூரி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். இதனை நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான கல்விகட்டண குழுஆய்வு செய்து அறிவித்தது.

இதன்படி இந்த கல்வி ஆண்டில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.2.25 லட்சம் என இரு வகைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் என்ற விவரம் வருமாறு:

1.பி.எஸ்.ஜி.-கோவை-ரூ.2.50 லட்சம், 2.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி-ரூ.2.50 லட்சம், 3.கற்பகவிநாயகா-ரூ.2.50 லட்சம், 4.ஸ்ரீமூகாம்பிகா-கன்னியாகுமரி-ரூ.20 லட்சம், 5.தாகூர்-சென்னை-ரூ.2.50  லட்சம், 6.சென்னை மருத்துவக்கல்லூரி-திருச்சி(எஸ்.ஆர்.எம்.குரூப்)-ரூ.2.50 லட்சம், 7.ஐ.ஆர்.டி.பெருந்துறை-ஈரோடு-ரூ.2.50 லட்சம், 8.ஸ்ரீமுத்துக்குமரன்-சிக்கராயபுரம்(மாங்காடு)-ரூ.2.25 லட்சம், 9.தனலட்சுமி ஸ்ரீனிவாசன்-பெரம்பலூர்-ரூ.2.25 லட்சம், 10.அன்னபூரணி-சேலம்-ரூ.2.25 லட்சம்.

இவைகளில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ஸ்ரீமுத்துக்குமரன் கல்லூரிக்கு இந்தஆண்டு ரூ.2.25 லட்சம் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த ஆண்டு புதிதாக துவங்கப்பட்டுள்ள தனலட்சுமி ஸ்ரீனிவாசன்(பெரம்பலூர்) மற்றும் அன்னபூரணி(சேலம்) ஆகிய இரு கல்லூரிகளுக்கு தலா ரூ.2.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்