முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்ககிரி அருகே வேன் மீது ரயில் மோதல்: 4 பேர் பலி

சனிக்கிழமை, 2 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சங்ககிரி, ஜீலை.1 - சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நேற்று மதியம் நிலைதடுமாறி கேட்டை உடைத்து சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் வேன் டிரைவர்கள் உட்பட 4 பேர் உடல் சிதறி பலியானார்கள்.  மேலும் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் என்ற கிராமக் உள்ளது.  ஈரோட்டிலிருந்து சேலம் செல்லும் ரயில் பாதை இந்த வழியே செல்கிறது.  வைகுந்தத்தில் இருந்து வடுகப்பட்டி என்னும் ஊருக்கு செல்லும் சாலை ரயில் பாதையை கடந்து செல்கிறது.  இந்த இடத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.  இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது இதனால் அந்த வழியே சென்ற ஆம்னி வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.

வைகுந்தத்தில் உள்ள அம்மன் மெட்ரிக் பள்ளிகு சொந்தமான வேனை பயிற்சிகாக டிரைவர்கள் 4 பேர் ஓட்டி வந்தனர்.  கேட் அருகே வந்ததும் கிளட்ச்சை மிதித்து பிரேக் போடுவதற்கு பதிலாக ஆஸிலேட்டரை பலம் கொண்ட மட்டும் டிரைவர் மிதித்துள்ளார்.  இதனால் முன்னால் நின்றிருந்த ஆம்னி வேனை தள்ளி கொண்டு ரயில்வே கேட்டையும் உடைத்து கொண்டு ரயில் பாதைக்கு வேன் சென்றது.  அதே நேரத்தில் ஈரோட்டிலிருந்து சேலம் நோகி வந்த சரக்கு ரயில் பள்ளி வேன் மீது மோதி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளத்தில் தள்ளிச் சென்றது.  இதில் வேன் சின்னாபின்னமாக சிதறியதுடன் வேனில் இருந்த டிரைவர்கள் சங்ககிரி ஆவரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் பழனிச்சாமி (45), கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த நைனாமலை மகன் செல்வம் (எ) முத்துசாமி (40),  ஆம்னி வேன் டிரைவர்  தாழையூர் பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து மகன் nullபதி (20) ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் சிதறி இறந்தனர்.

ஸ்கூல் வேனை ஓட்டிச் சென்ற வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (40), சங்ககிரி ஜோசியர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் நடேசன் (60), ஆம்னி வேனில் இருந்த தாழையூர் பகுதியைச் சேர்ந்த மாணிகம் மகன் மாது (40), பழனியப்பன் மகன் சரவணன் (30), மாணிக்கம் மகன் ரவி (32), நடேசன் மகன் நாகராஜ் (28), வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து மகன் மணி (40) ஆகியோர் படுகாயமடைந்து சங்ககிரி அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று ஈரோடு அரசு மருத்துவமணையில் மேல்சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் ஈரோடு மருத்துவமணைக்கு செல்லும் வழியில் இறந்தார்.  ரயில் மோதிய வேகத்தில் உருகுலைந்த ஸ்கூல் வேன் உதிரி பாகங்கள் வழியெங்கும் சிதறியதுடன், ரயில் என்ஜின் முன்பகுதி சேதமடைந்து கண்ணாடிகள் நொறுங்கின.  இந்த சேதத்தினால் ரயிலை ஓட்டி வந்த டிரைவர் பாலகிருஷ்ணனின் கை விரல்கள் இரண்டு துண்டாகியது.  விபத்து அறிந்த கிராம மகள் ஆயிரகணகானோர் அங்கு திரண்டாதால் மேலும் பரபரப்பு உண்டாகியது.

சக்பவம் குறித்து தகவலறிந்த சங்ககிரி போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.  இந்த விபத்தால் இந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக சென்றன.

இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்