முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய நாடுகளுக்கு கடாபி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி,ஜூலை.3 - லிபியாவின் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் போரிட்டு வருகின்றன. அவற்றின் போர் விமானங்கள் கடாபியின் மாளிகை மீதும், அவர் பேசும் இடங்கள் மீதும் குண்டு வீசி வருகின்றன. இதனால் உயிருக்கு பயந்த அவர் பதுங்கி வாழ்ந்து வருகிறார். 

இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் திரிபோலியில் உள்ள நிரீன் சதுக்கத்தில் திரண்டனர். அங்கு கடாபியின் டெலிபோன் உரை ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் ஐரோப்பிய நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. எங்களாலும் அவர்கள் மீது போர் தொடுக்க முடியும். எங்கள் வீடுகளை தகர்ப்பது போன்று அவர்களது வீடுகள், அலுவலகங்கள், ராணுவ தளங்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த முடியும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago