முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை மருந்து தொழிற்சாலையில் ஹெராயின் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.3 - திருட்டுத்தனமாக போதை மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை கண்டுபிடித்த போதை பொருள் தடுப்பு போலீசார் அந்த தொழிற்சாலியில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஜார்க்கண்ட் மாநிலம்  பக்வானா என்ற கிராமத்தில் ஒரு கள்ள போதை பொருள் தொழிற்சாலையை போதை பொருள் தடுப்பு போலீசார் கண்டுபிடித்தனர்.  அங்கிருந்த ஜாகீர் உசேன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் இருந்த 1 கிலோ ஹெராயின் போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜாகீர் உசேனிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு இந்த போதை பொருள் உற்பத்தியில் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதை அடுத்து மேற்கு வங்காளத்திற்கு தப்பி  செல்ல முயன்ற நஜ்மா பீபி என்ற பெண்ணை டெல்லியில் உள்ள ரித்தாலா மெட்ரோ ரயில் நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த பெண்ணிடம் இருந்து 1 கிலோ ஹெராயின்  பறிமுதல் செய்யப்பட்டது. 

பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ ஹெராயினின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.இந்த போதை கும்பலுடன் தொடர்புடைய மற்றவர்களையும் கண்டுபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!