முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசா - கனிமொழிக்கு ஜஸ்வந்த் சிங் வக்காலத்து

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.3 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிக்கி சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு ஜாமீன் மறுக்கப்படுவதில் உள்ள நியாயம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் கேள்வி எழுப்பி உள்ளார். ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஜஸ்வந்த்சிங் இது குறித்து மேலும் கூறியதாவது, 

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஏற்கனவே விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராசாவும், கனிமொழியும் எவ்வாறு விசாரணையில் குறுக்கீடு செய்ய முடியும். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுவது சிறிது வியப்பையே அளிக்கிறது. இது எனது தனிப்பட்ட கருத்து. ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரந்தரமாக சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் கருத்து இல்லை. குற்றவாளிகள் அனைவருக்கும் விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கோரிக்கை. 

பொதுவாக கொள்ளை, கொலை வழக்கில் கைது செய்யப்படுவர்களுக்கு விசாரணை தொடங்கிய பின் ஜாமீன் வழங்கப்பட்டு தான் வந்துள்ளது. யாரும் விசாரணையின் போது நிரந்தரமாக சிறையில் வைக்கப்படுவது இல்லை. இதுவும் எனது தனிப்பட்ட கருத்துதான். நான் சட்டவல்லுனர் அல்ல. எனினும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியில் வருவதற்கு அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு என்றார் ஜஸ்வந்த்சிங்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்