முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா நடத்திய போரில் 2,25,000 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை.3 - கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா நடத்திய போரில் இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள் மற்றும் 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் இரண்டு விமானங்களை கடத்திச் சென்று நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரம் மற்றும் வாஷிங்டன்னில் உள்ள பெண்டகன் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 3 ஆயிரம் அறிவு ஜீவிகள் பலியானார்கள். இதனையடுத்து அமெரிக்கா பாதுகாப்பு நடவடிக்கையாக ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மீது போர் தொடுத்தது. மேலும் ஏமன், லிபியா, சிரியா,பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோ நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அமெரிக்காவுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி செலவாகி உள்ளது. அதைவிட மேலாக 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் இந்த போரில் பலியாகி உள்ளனர். 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகம் நடத்தி அது தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. போரினால் ஏற்படும் செலவு குறித்து கருத்தில் கொள்ளாமல் அரசியல் காரியங்களுக்காக படையையும் ஆயுதங்களையும் பெருமளவு பயன்படுத்தியதால்தான் இவ்வளவு செலவு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். போர் தொடர்ந்து நடந்தால் சாவு மேலும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago