முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபக்சேவை கண்டித்து சென்னையில் உண்ணாவிரதம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூலை.3 - ராஜபக்சேவை கண்டித்து சென்னையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் நடத்திய இப்போராட்டத்தை இயக்குனர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு தமிழின அழிப்பில் ஈடுபட்டு வருகிறது. அங்கு நடந்த போர்க்குற்றத்தை ஐ.நா. வின் விசாரணை குழு உறுதி செய்துள்ளது. ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். சிங்கள அரசுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் தினந்தோறும் போராட்டங்கள்  நடைபெற்று வருகின்றன. இதே காரணத்திற்காக, போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர். இயக்குனர் மணிவண்ணன் இப்போராட்டத்தை தொடங்கி வைத்தார். அருள்சோரி, செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அமீது (நாம் தமிழர்கட்சி) ஒவியர் வீ.வீரசந்தானம், கோவை ஈஸ்வரன், மீனவ சங்கத் தலைவர் மகேஷ் உட்பட ஏராளமானோர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். கவிஞர் காசி ஆனந்தன் நேற்று மாலை உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உரையாற்றினார். 

தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தை ஏற்று இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். ஐ.நா.குழுவின் அறிக்கையை மதித்து எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். போர்க்குற்றவாளி ராஜபக்சேவை காப்பாற்ற இந்திய அரசு முயற்சிக்க கூடாது. 60 ஆண்டுகால இனபடுகொலை தொடர்ச்சியே போர்குற்றம் என்பதே ஐ.நா.சபை அறிவித்து ஈழத்தமிழர்களை காப்பாற்றவேண்டும். இந்த கோரிக்கைகள் உண்ணாவிரதப்போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்