முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டசபைக்குள் பா.ஜ.க நுழையும் - சுஷ்மா சுவராஜ்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,பிப்.28 - கேரள சட்டசபைக்குள் பா.ஜ.க. நுழையும் என்று சுஷ்மா சுவராஜ் கூறினார். கேரள மாநிலத்தில் கேரள பாதுகாப்பு யாத்திரை நடந்தது. இதில் கலந்து கொண்டு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. தலைவருமான சுஷ்மா சுவராஜ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,  கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் மாறி மாறிஆட்சிக்கு வந்தும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை. 

இந்த 2 கட்சிகளில் உள்ளவர்கள் ஊழல் புகார்களிலும் பாலியல் வழக்குகளிலும் சிக்குகிறார்கள். இதில் இருந்து கேரளாவை காக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த பாதயாத்திரை முடிந்துள்ளது. வருகிற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து சட்டசபைக்குள் நுழையும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் அவருக்கு மலர்களால் ஆன கிரீடத்தை நிர்வாகிகள் அளித்து வரவேற்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்