முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்டரம் ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய அதிகாரம்: வினோத் ராய்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.3 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விபரம் மற்றும் பெட்ரோல் விற்பனையில் லாப பங்கீடு குறித்து தணிக்கை செய்ய மத்திய கட்டுப்பாடு மற்றும் தனிக்கை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்று அதன் ஆணையர் வினோத் ராய் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விபரம் மற்றும் பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் லாப பங்கீடு குறித்து தணிக்கை செய்ய மத்திய கட்டுப்பாடு மற்றும் தணிக்கை ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூட இதற்கு கொள்கை விவகாரங்களில் மத்திய தணிக்கை மற்றும் கட்டுப்பாடு ஆணையம் கருத்து கூற முடிவு செய்ததில்லை என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஆணையர் வினோத் ராய் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் பெட்ரோல் விற்பனையில் லாப பங்கு குறித்து தணிக்கை செய்ய மத்திய தணிக்கை மற்றும் கட்டுப்பாடு ஆணையத்திற்கு தடை இல்லாத அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளார். 

கிருஷ்ணா மற்றும் கோதாவரி டி6 படுகையில் கியாஸ் ஒதுக்கீடு செய்ததது தொடர்பான பிரச்சினை குறித்து குறிப்பிட்ட ராய், மத்திய ஆயில் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஒப்புதலுடன்தான் கியாஸ் ஒதுக்கீடு குறித்து தணிக்கை செய்யப்பட்டது. ரிலையன் போன்ற தனியார் நிறுவனங்களில் இருந்து பெட்ரோலிய துறை அமைச்சகம் மூலமாகத்தான் ஆணயம் பல கேள்விகளுக்கு விளக்கம் கேட்கிறது. ஆணையம் நேரடியாக தலையிடுவதில்லை என்றும் ராய் கூறினார். கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் தணிக்கை செய்திருப்பது ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டுதான் நடந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தஸ்தாவேஜுகளை ஆணையர் முழுமையாக பார்த்திருக்க வேண்டும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக ராய் மேலும் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!