முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஜூலை.3 - புதுவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.அதையடுத்து மே 16-ந் தேதி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு கடந்த மாதம் 1-ந் தேதி தியாகராஜன் எம்.எல்.ஏ. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 3-ந் தேதி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதையடுத்து 8-ந் தேதி 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 29-ந் தேதி சபாநாயகர் தேர்தல் நடந்து, சபாநாயகராக சபாபதி தேர்ந்து எடுக்கப்பட்டு பதவி ஏற்றார். அதைதொடர்ந்து நேற்று அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் விபரம் வருமாறு:-

 

முதல்வர் ரங்கசாமி:-

 

இவர் முதல்வர் பதவியோடு, பொது நிர்வாகம், உள்துறை, வருவாய், பொதுப்பணி, திட்டம் மற்றும் நிதி, மின்சாரம், கூட்டுறவு, சுகாதாரம், சிவில் சப்ளைஸ் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத மற்ற துறைகள்.

 

கல்யாணசுந்தரம்:-

 

இவர் போக்குவரத்து துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். இவர் போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பம், கல்லூரி மற்றும் பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலம், கலை பண்பாட்டுத்துறை மற்றும் அரசு பணிமனை ஆகிய துறைகளை கவனிப்பார். 

 

சந்திரகாசு:-

 

இவர் விவசாயத்துறை அமைச்சர் என்று அழைக்கப்டுவார். இவர் விவசாயம், கால்நடை, தொழில் மற்றும் வர்த்தகம், புள்ளியல், எழுது பொருள் அச்சுத்துறை மற்றும் துறைமுகம் ஆகிய துறைகளை இவர் கவனிப்பார். 

 

ராஜவேலு:- 

 

இவர் சமூக நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். சமூக நலம், 

ஆதிதிராவிடர் நலம், மகளிர் மற்றும் குழந்தைகள், பிற்படுத்தப்பட்டோர் நலம், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் இவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

பன்னீர்செல்வம்:​- 

 

இவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். உள்ளாட்சி, சமூகம், டி.ஆர்.டி.ஏ., மீன்வளம், வீட்டு வசதி மற்றும் தீயணைப்பு துறைகள் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்