முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒரு நாள்: இலங்கை இங்கிலாந்து அணியை வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லீட்ஸ், ஜூலை. 3 - இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற 2 -வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 69 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகி உள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில் ஜெயவர்த்தனே சதம் அடித்து அணி சவாலான ஸ்கோரை எடுக்க உதவினார். சங்கக்கரா மற் றும் மேத்யூஸ் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, லக்மல் மற்றும் ரன்டிவ் ஆகியோர் அபாரமாக பந்து வீசி தலா 3 முக்கிய விக்கெட்டுகளைச் கைப்பற்றினர். தவிர, மென்டிஸ், குலசேகரா மற்றும் மலிங்கா ஆகியோர் அவர்க ளுக்கு ஆதரவாக பந்து வீசினர்.  

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதன் 2 - வது போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லியில் நடந்தது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பீல்டி ங் கை தேர்வு செய்தது. இலங்கை அணி தரப்பில், ஜெயவர்த்தனே மற்று ம் கேப்டன் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப் பிற்கு 309 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் சதமும், ஒரு வீரர் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித்தனர். 

துவக்க வீரராக இறங்கிய ஜெயவர்த்தனே அதிரடியாக ஆடி, 150 பந்தி ல் 144 ரன்னை எடுத்தார். இதில் 14 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ஸ்வான் வீசிய பந்தில் கீஸ்வெட்டரிடம் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார். 

அடுத்தபடியாக, கீப்பர் சங்கக்கரா 85 பந்தில் 69 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் ஸ்வான் வீசிய பந்தில் கீப்பர் கீஸ்வெட்டரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். தவிர, ஆல்ரவுண்டர் மேத்யூஸ் 30 பந்தில் 46 ரன்னை எடுத்து இறுதிவ ரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

இங்கிலாந்து அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஸ்வான் 42 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பிரஸ்னன் 1 விக்கெட் எடுத்தார். ஆண்டர்சன், பிராட் மற்றும் டெர்ன்பேச் ஆகி யோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

இங்கிலாந்து அணி 310 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இலங்கை அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இதனால் இலங்கை அணி இந்த 2  - வது போட்டியில் 69 ரன் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 -1 என்ற கணக்கில் சமானாகி உள்ளது. 

இங்கிலாந்து அணி தரப்பில், மார்கன் அதிகபட்சமாக, 40 பந்தில் 52 ரன்னை எடுத்தார். தவிர, குக் 52 பந்தில் 48 ரன்னையும், டிராட் 54 பந் தில் 39 ரன்னையும், பெல் 47 பந்தில் 35 ரன்னையும், கீஸ்வெட்டர் 25 ரன்னையும், எடுத்தனர். 

இலங்கை அணி சார்பில், லக்மல் 43 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். ரன்டிவ் 43 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவி ர, மென்டிஸ் 2 விக்கெட்டையும், மலிங்கா மற்றும் குலசேகரா ஆகி யோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநா   யகனாக ஜெயவர்த்தனே தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago