முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.இ.தொ. கல்விக் குழும நெறிமுறைக்கு இடைக்காலத் தடை

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.3 -  தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நடந்த விசாரணையின் முடிவில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும நெறிமுறைக்கு சென்னை உயர் நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:

கடந்த 20 வருடங்களாக பட்டியல் இனத்தவர் (தாழ்த்தப்பட்டவர்கள்) மற்றும் மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் பொறியியல் கல்லூரிகளில் பயில்வதற்கு பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும், அதாவது, 35  மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும் என்று தமிழக அரசு நெறிமுறை வகுத்திருந்தது.  அதன் பின்னர், 2002 முதல் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்களும் 35  மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் நெறிமுறை வகுத்திருந்தது.  ஆனால், நடப்பாண்டில், அதாவது, 2011​- 12 ஆம் ஆண்டிற்கு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக, பொதுப் பிரிவைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் 50  மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு செய்யப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் 45 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் நெறிமுறை வகுத்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்போது, பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக, பட்டியல் இனத்தவர் (தாழ்த்தப்பட்டவர்கள்) /  அருந்ததியர் / மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் 40  மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் 45ரூ மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், பொதுப் பிரிவினர் 50 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் தற்போது வெளியிட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப, ஆதி திராவிடர் / அருந்ததியர் / பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்களும் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக 45 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இந்த புதிய நெறிமுறை, கிராமப்புறங்களில்  பிளஸ் 2 படித்த ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு பாதகமாக அமையும் என்பதாலும், சமூக திக்கு எதிரானது என்பதாலும்,  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா,   பாரதப் பிரதமர்  மன்மோகன்சிங் அவர்களை 14.6.2011 அன்று புது டில்லியில் சந்தித்த போது அளித்த கோரிக்கை மனுவில்  பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு வகுத்துள்ள தற்போதைய நெறிமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என்றும், அகில இந்திய தொழில்நுட்பக் குழுமம் வகுத்துள்ள புதிய நெறிமுறைகளுக்கு மாறாக, நடைமுறையில் உள்ள நெறிமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

இது குறித்து மைய அரசோ, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமமோ எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உடனடியாக துவங்கப்பட வேண்டிய நிலையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்களும் பொறியியல் கல்வி பயின்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில்,  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வழங்கிய அறிவுரைகளின் பேரில், தமிழக அரசு 29.6.2011 அன்று சென்னை உயர் திமன்றத்தில் பேராணை மனு ஒன்றை தாக்கல் செய்தது.  அந்த  பேராணை மனுவின் மீது இறுதித் தீர்ப்பு வரும் வரையில், ஏற்கெனவே தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்  என்றும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு தடை வழங்கும்படியும் தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டது.

இந்த பேராணை மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் நாட்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நெறிமுறைகள் பின்பற்றப்படுவதற்கு அனுமதி அளித்தும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவின் மூலம், ஆதி திராவிடர் / அருந்ததியர் / பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் நலன் காக்கப்பட்டு, சமூகதி நிலை நாட்டப்பட்டுள்ளது.  தங்களுடைய பொறியியல் கல்வி கனவு நனவாவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு, தாழ்த்தப்பட்ட / பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago