முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.28 - சென்னை போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்படுவதாக மிரட்டல் போன் வந்ததையடுத்து சென்ட்ரல் ரயில் நிலையம் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டது. சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் ஆசாமிக்கு வலைவீசப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய வாலிபர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு குண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டான். இது குறித்து உடனடியாக ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப் பட்டு, அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. ரெயில் நிலையத்துக்குள் வரும் பயணிகள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உடைமைகளும் கடுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டன. 

வெளி மாநிலங்களில் வரும் ரெயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியான பொருட்கள் கிடந்தால் அதனை யாரும் தொட வேண்டாம் என்றும், அதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் ஒலிபெருக்கி மூலம் போலீ சார் கேட்டுக் கொண்டனர். ரெயில் நிலையம் முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை. அவரை பிடிப்பதற்காக போலீசார் வலைவிரித்துள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் பதிவான நம்பரை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்