முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு வாரத்தில் மணல் விலையை குறைக்க ஜெயலலிதா நடவடிக்கை- அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தகவல்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு, ஜூலை.- 5 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாட்டில் கூடுதலாக 85 மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் மணல் விலை குறையத் தொடங்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் கூறினார். ஈரோடு மாவட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் கூறுகையில்,

தமிழகத்தில் மணல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 280 மணல் குவாரிகளில் பல குவாரிகளுக்கு உரிமம் காலம் முடிந்துவிட்டது. மேலும் குவாரிகளின் உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் கூடுதலாக 85 குவாரிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 45 குவாரிகள் திறக்கப்ட்டுவிட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள் மாற்றம் மற்றும் அவர்கள் பொறுப்பேற்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் மணல் குவாரிகளின் உரிமங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 40 குவாரிகளும் இன்னும் 2 அல்லது 3 நாட்கில் திறக்கப்பட உள்ளதால் ஒரு வாரத்தில் மணல் விலை குறையும்.

சென்னையில் மணல் விலை பாதியாக குறைந்து விட்டது. எனவே யாரும் மணல் தட்டுப்பாடு என்ற காரணத்தை காட்டி மணல் விலையை உயர்த்த வேண்டாம். மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்