முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணெய் பாக்கியை தராவிட்டால் சப்ளை நிறுத்தம் இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

தெஹரான்,ஜூலை.- 5 - நிலுவைத் தொகையை உடனடியாக அளிக்காவிட்டால் கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்தி விடுவோம் என இந்தியாவை ஈரான் எச்சரித்துள்ளது.  சர்வதேச பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், நிலுவை தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ஈரானிடமிருந்து சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகளவில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. கடந்த 6 மாதங்களாக கச்சா எண்ணெய்க்கான தொகையை இந்தியா அளிக்கவில்லை. ஆசிய, ஐரோப்பிய வங்கிகள் மட்டுமின்றி சமீபத்தில் ஜெர்மன் வங்கியும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து சப்ளையை நிறுத்தப் போவதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் எச்சரித்துள்ளதாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஈரான் மீது சர்வதேச தடை உள்ளதால் அந்நாட்டுக்கு பிற நாடுகளின் கரன்சிகளில் அளிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு ஈடாக இந்தியா தங்கத்தை அளித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்