முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: ஜோகோவிச் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 5 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன்,ஜூலை.- 5 - விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விம்பிள்டன் போட்டியில் நோவக் ஜோகோவிச் வெல்லும் முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் செர்பிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.  இறுதி சுற்றில் ஜோகோவிச் 6-4, 6-1, 1-6,6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி சுற்றில் அமெரிக்காவின் பாப்பிரையன் மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி 6-3, 6-4, 7-6(2) என்ற நேர் செட்களில் ஸ்வீடனின் ராபர்ட் ருமேனியாவின் ஹாரியா டீக்கா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் பிரையன் சகோதரர்கள் பெறும் 11 வது சாம்பியன் பட்டம் இது. இதன் மூலம் இரட்டையர் பிரிவில் 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஆஸ்திரேலியாவின் மார்க் உட்போர்டு- டோட், உட்பிரிட்ஜ் ஜோடியின் சாதனையை சமன் செய்தனர் பிரையன் சகோதரர்கள். மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி சுற்றில் செக் குடியரசின் வீட்டா ஸ்லோவேனியாவின் கேத்தரினா, ஸ்ரீபோட்னிக் ஜோடி 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் லிசிக்கி ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்