முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் ஒபாமா கொல்லப்பட்டதாக வதந்தி

புதன்கிழமை, 6 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜூலை - 6 - அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டதாக ட்விட்டர் இணைய தளத்தின் மூலம் பரவிய வதந்தியால் உலகெங்கும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் சேனலின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த சில விஷமிகள், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சுட்டுக் கொல்லப்பட்டதாக பொய்யான செய்தியை அதில் சேர்த்துவிட்டனர். இந்த வதந்தியால் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த விஷமத்தனத்தை செய்தவர்கள் தங்களது பெயரை ஸ்கிரிப்ட் கிட்டிஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வதந்தித் தகவலால் அமெரிக்கா மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அரசு இதுகுறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாக்ஸ் நியூஸ் நிறுவனமும் தங்களது ட்விட்டர் கணக்கு எப்படி ஹேக் செய்யப்பட்டது என்பது குறித்து ட்விட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்