முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை - இலங்கை - கென்யா அணிகள் இன்று மோதல்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். 1 -  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொழும்பு நகரில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் கென்ய அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. 10 -வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 2 வார காலமா க நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை இந்தியா, இலங்கை, மற்றும் வங்காளதேசம்  ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 

இதில் 14 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அவை 2  பிரி வாக பிரிக்கப்பட்டு உள்ளன. இரண்டு பிரிவிலும் தலா 7 அணிகள் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வொரு அணியும், தங்கள்  பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும், முதல் 4 இடங்கைளைப் பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். 

உலகக் கோப்பை போட்டியின் 14 -வது லீக் ஆட்டம் கொழும்புவில் இன்று நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள இலங்கை மற்றும் கென் யா அணிகள் மோத உள்ளன. 

இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் 210 ரன் வித்தியாசத்தில் கனடா அணியை தோற்கடித்தது. 2 - வது லீக் ஆட்டத்தில்  பாகிஸ்தானி டம் 43 ரன்னில் தோல்வி அடைந்தது. தற்போது பலவீனமான கென் யாவை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் இலங்கை அணி எளிதில் வெற் றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னணி பேட்ஸ்மேனான ஜெயவர்த்தனே பாகிஸ்தானுக்கு எதிராக சொதப்பி விட்டார். இதனால் அந்த அணிக்கு தோல்வி ஏற்பட்டது. சங்கக்கரா , தில்ஷான், போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். 

கென்ய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2- வது ஆட்டத்தில், பாகிஸ்தானிடம் 205 ரன்னிலும் தோற்றது. வலுவான இலங்கை அணியை சமாளிக்க அந்த அணி கடுமையாக போராட வேண்டும். 

உலகக் கோப்பையில் இரு அணிகளும் தலா 3 முறை மோதி உள்ளன. இதில் இலங்கை 2 ஆட்டத்திலும், கென்யா 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்று  உள்ளன. பகல் - இரவாக நடைபெறும் இந் த ஆட்டம் பிற்பகல் 2. 30 மணிக்கு துவங்கிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனல், ஸ்டார் ஸ்போர்ட்சில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago