முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17- ம் தேதி `மேதின' விழா: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை, 7 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

சென்னை, ஜூலை.- 7 - அ.தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்ற  தொகுதிகளிலும் வருகின்ற 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை `மேதின'  விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் ஏகோபித்த பேராதரவோடு அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்று, மக்கள் நலத்திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிமுறைகள் நிறைவு பெற்றவுடன், அ.தி.மு.க. சார்பில் மே தின  விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று ஏற்கனவே நான் அறிவித்து இருந்தேன். உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள்  `மேதினம்'. ஓய்வு என்பதற்கும், மகிழ்வு என்பதற்கும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டு என்று உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி பெற்ற நாள் `மேதினம்' அந்த தினத்தை கொண்டாடும் வகையில் 17.7.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்திலும் மேதின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள  இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்களும், நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்திற்கு  உட்பட்ட
 சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை மாவட்ட கழக செயலாளர்களுடனும், நிர்வாகிகளுடனும் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ.ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞரணி, மகளிரணி மாணவர் அணி, வழக்கறிஞர்கள் பிரிவு,  சிறுபான்மையினர் நலப்பிரிவு,  விசாயப்பிரிவு,  மீனவர் பிரிவு,  மருத்துவர் அணி,  இலக்கிய அணி,  அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி  அமைப்பு பிரதிநிதிகளுடனும் இணைந்து தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட  சட்டமன்ற தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி அதன் விபரங்களை தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்