முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏதென்ஸ் சிறப்பு ஒலிம்பிக்: புதுவை மாணவனுக்கு தங்கம்

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

புதுச்சேரி,ஜூலை.8  - கிரீஸ் தலைநகர் ஏதென்சில் நடைபெற்ற கோடை கால சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கூடைப்பந்து விளையாட்டில் புதுச்சேரி மாணவர் டி. தமிழரசன்(21) தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஏதென்சில் நடைபெற்ற இந்த போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த சிறப்பு பள்ளிகளில் இருந்து 3 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் சதே பள்ளியை சேர்ந்த டி. தமிழரசன், கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார். இதே போல் சத்யா சிறப்பு பள்ளி மாணவி ரூபா, மகளிர் கூடைப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அரசு மனநலம் குன்றியோர் இல்ல மாணவர் சந்தோஷ் வாலிபால் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். தமிழரசன் மற்றும் ரூபா ஆகியோர் ஏதென்சில் இருந்து கடந்த புதன் கிழமை புதுச்சேரி வந்தனர். பஸ் நிலையத்தில் சிறப்பு பள்ளியின் நிறுவனர் மருத்துவர் சுகதன் மலர்சென்டு கொடுத்து வரவேற்றார். சதே பள்ளியின் உடற் பயிற்சியாளர்கள் அரிபுத்திரன், அனிதாராஜ், ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாணவன் சந்தோஷ் சில தினங்களில் புதுச்சேரி வரவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்