முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.8 - இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் 27-ம் தேதி டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்று தெரிகிறது. 

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் இருந்து அந்த நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்திவிட்டது. அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாக இருநாடுகளிடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கடந்தமாதம் இஸ்லாமாபாத்தில் இருநாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்திய வெளியறவுத்துறை செயலாளர் நிரூபமாராவ் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சல்மான் பஷீர் மற்றும் இருதரப்பு உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர். அப்போது வர்த்தகம்,சுற்றுலாவுக்கான விசா முறையை தளர்த்துவது குறித்தும் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் பற்றியும் பேச்சவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றது என்றும் அடுத்து இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் அப்போது முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி வரும் 27-ம் தேதி இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் புதுடெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் ஹினா ரப்பானி ஹர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். அப்போது இருநாடுகளின் அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிப்பார்கள் என்று நியூஸ் டெய்லி என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பு இருநாடுகளின் பனிக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடத்தவுள்ள விஷயங்களை இறுதி செய்யும். இருநாடுகளின் எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் விதிமுறைகள் தளர்வு, வர்த்தம் மற்றும் அணு ஆயுதம் சம்பந்தமாக நம்பிக்கையை ஏற்படுத்துதல் ஆகியவைகள் குறித்து பேச்சுவார்த்தையில் இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும் வருகின்ற 23,24 ஆகிய தேதிகளில் இருநாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெறும் என்றும் தெரிகிறது. ஜம்மு-காஷ்மீர் விவகாரம், தீவிரவாதம் ஒழிப்பு வர்த்தகம் உள்பட 8 பிரச்சினைகள் குறித்து இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தை நடப்பதற்கு ஒரு நாள் முன்கூட்டியே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் குர்ஷீத் புதுடெல்லி வந்துவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்