முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவு அணி முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

டொமினிக்கா, ஜூலை. 8 - இந்திய அணிக்கு எதிராக டொமினிக்காவில் நடைபெற்று வரும் 3 - வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன் எடுத்து இருந்தது. 

முன்னதாக மே.இ.தீவு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடந்த 2 -வது டெஸ்ட் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் இறுதியில் டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.  

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணிக்கும், கேப்டன் டேர ன் சம்மி தலைமையிலான மே.இ.தீவு அணிக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து நடந்த 2 -வது டெஸ்ட் போட்டி மழையால் பா திக்கப்பட்டது. இறுதியில் 5 -வது நாள் ஆட்ட முடிவில் நேரமின்மை காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்தது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே யான 3 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டொமினிக்கா தீவில் ரொசேயு நகரில் உள்ள வின்ட்சர் பார்க்கில் நேற்று முன்தினம் துவங்கி யது. 

இந்தப் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே, 2 -வது டெஸ்ட் போல இந்த டெஸ்டும் மழையால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவிய து. எதிர்பார்த்தது போலவே முதல் நாள் ஆட்டத்தில் மழை விளை யாடியது. 

இந்திய அணி இந்த டெஸ்டில் முன்னதாக டாசில் வெற்றி பெற்று பீல் டிங்கை தேர்வு செய்தது. மே.இ.தீவு அணி தரப்பில், அட்ரியன் பரத் மற்றும் போவெல் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

மே.இ.தீவு அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 31.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்னை எடுத்து இருந்தது. அப் போது, டிவைன் பிராவோ 22 ரன்னுடனும், சந்தர்பால் 17 ரன்னுடனு ம் களத்தில் இருந்தனர். 

முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவு அணியின் பேட்டிங் மந்தமாக வே இருந்தது. தேனீர் இடைவேளையின் போது, 14 ஓவரில் 2 விக்கெ ட் இழப்பிற்கு 24 ரன்னை எடுத்து இருந்தது. 

பின்பு அந்த அணி 24.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. மதிய உணவு இடைவேளையின் போது, 28 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன் னை எடுத்து இருந்தது. 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரமே ஆட்டம் நடந்த து. அந்த அணி 31.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்னை எடுத்து இருந்தது. பிறகு, மழை விட்டு விட்டு பெய்ததால் ஆட்டம் பாதிக்கப் பட்டது. மைதானம் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. 

இந்திய அணி தரப்பில், வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 23 ரன் னை விட்டுக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 19 ரன் னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். சர்மா 2 -வது டெஸ்டில் சிறப் பாக பந்து வீசியது நினைவு கூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்