முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் உயிருக்கு குறியா? துப்பாக்கியுடன் வாலிபர் கைது

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

லக்னோ,ஜூலை.8 - ராகுல் பாத யாத்திரையில் துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே நெடுஞ்சாலை பணிக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி போராட்டத்தில் குதித்துள்ளார். ஏற்கனவே விவசாயிகள் மீது போலீசார் பட்டா-பசால் கிராமத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து போராட்டம் நடத்தி கைதானார். நேற்று முன்தினம் அங்கு விவசாயிகள் பேரணி நடப்பதாக இருந்தது. ஆனால் போலீசார் மறுப்பு தெரிவித்ததால் இந்த போராட்டம் அலிகாருக்கு மாற்றப்பட்டது. இதனால் அலிகாருக்கு பாதயாத்திரை செல்ல ராகுல் திட்டமிட்டார்.முதல் நாள் 19 கிலோ மீட்டர் பாதயாத்திரையில் நடந்த ராகுல் விவசாயிகள் வீடுகளில் தங்கினார். ராகுல் காந்தியுடன் விவசாயிகளும் பாதயாத்திரையில் கலந்து கொண்டனர். ராகுல் பாதுகாப்பிற்காக சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களும் சென்றனர். இந்த நிலையில் அலிகார் மாவட்ட எல்லையை அடைந்த போது ராகுல் சென்ற வழியில் ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் அலைந்ததை பாதுகாப்பு படை வீரர்கள் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவரது பெயர் ஹரிமோகன் சர்மா என்பதும் 32 வயதாகும் அவர் தாப்பால் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். அவர் ஏன் துப்பாக்கியுடன் வந்தார்?கொலைச்சதித் திட்டத்துடன் வந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர். ராகுல் பாதயாத்திரையில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் ராகுல் தனது பாதயாத்திரையை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். துப்பாக்கியுன் வாலிபர் பிடிபட்டுள்ளதால் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதயாத்திரை செல்லும வழிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ராகுல் பாதயாத்திரையை தடுக்கமாட்டோம் , சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழாமல் பார்த்துக்கொள்வோம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்