முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தொடர்: ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ்

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி,ஜூலை.8 - இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில் இருந்து கேமரூன் ஒயிட் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். 

அதே சமயம் 20 ஓவர் போட்டிக்கு கேமரூன் ஒயிட்டே ஆஸ்திரேலிய அணிக்கு தலைமையேற்கிறார். சமீபத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த ஒயிட் மோசமான பார்ம் காரணமாக ஒரு நாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன், ஆல்ரவுண்டர் ஜான் ஹேஸ்டிங்ஸ் ஆகியோருக்கு இருபது ஓவர் ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 2 இருபது ஓவர் ஆட்டங்கள், 5 ஒரு நாள் ஆட்டங்கள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் செப்டம்பர் 20 ம் தேதி வரை நடைபெறவுள்ளன. 

இந்த நிலையில் இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டிக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் கிளார்க்(கேப்டன்), டக்போலிங்கர், சேவியர் டொஹெர்ட்டி, பிராட் ஹார்டின், ஜான் ஹேஸ்டிங்ஸ், டேவிட் ஹசி, மைக்கேல் ஹரி, மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் பாட்டின்சன், ரிக்கி பாண்டிங், ஸ்டீவன் ஸ்மீத். இருபது ஓவர் அணியில் கேமரூன் ஒயிட்(கேப்டன்), ஷேன் வாட்சன்(துணை கேப்டன்), ஆரோன்பிஞ்ச், பிராட் ஹாடின், ஜான் ஹேஸ்டிங்ஸ், டேவிட் ஹசி, மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஷான் மார்ஷ், ஸ்டீபெனியோ சீஃப், ஜேம்ஸ் பாட்டின்சன், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago