முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் குகைக்கோயிலுக்கு 9-வது குழு யாத்திரை

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு,ஜூலை.- 9 - அமர்நாத் குகைக்கோயிலில் பனி லிங்கத்தை தரிசிக்க நேற்று 9-வது குழுவினர் யாத்திரையாக ஜம்முவில் இருந்து புறப்பட்டு சென்றனர். இந்த குழுவில் 3 ஆயிரத்து 723 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 104 பெண்கள், 88 குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் 118 வாகனங்களில் சென்றனர். இவர்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலையில் பலத்த மழை பெய்தபோதிலும் இவர்கள் அமர்நாத் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். யாத்திரை செல்பவர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து நேரிடாமல் இருக்க மூன்றடக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!