முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற கூட்டத்தில் கல்மாடி கலந்துகொள்வது கோர்ட்டு முடிவு செய்யும்: மீராகுமார்

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 9 - பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் சுரேஷ் கல்மாடி கலந்துகொள்வது குறித்து தகுதியான கோர்ட்டுதான் முடிவு செய்யும் என்று லோக்சபை சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காங்கிரஸ் தலைவர் சுரேஷ் கல்மாடி எம்.பி. தற்போது கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று லோக்சபை சபாநாயகர் மீரா குமாருக்கு கல்மாடி ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மீரா குமார் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சுரேஷ் கல்மாடி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தகுதியான கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும். பாராளுமன்ற கூட்டத்தில் எம்.பி.யாக இருப்பவர் யாரும் கலந்துகொள்வதை நான் எதிர்ப்பவர் அல்ல. அதேசமயத்தில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவிடம் இருந்து கூட்டத்தில் அனுமதிக்கக்கோரி எந்தவித கடிதமும் வரவில்லை என்றும் மீரா குமார் தெரிவித்தார். இது சட்ட சம்பந்தப்பட்டதாகும். பாராளுமன்றம்தான் அதிகாரம் படைத்தது என்றாலும் கல்மாடியின் கெளரவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை கருத்தில் கொள்ள வேண்டும்.சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அதை நாம் ஒதுக்கி தள்ளிவிட முடியாது என்றும் மீரா குமார் மேலும் கூறினார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலில் சிக்கியுள்ள கல்மாடி,காங்கிரஸ் பார்லிமெண்டர் கட்சி செயலாளர் பதவியில் இருந்தும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட கல்மாடி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!