முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மே.இ.தீவு அணி 204 ரன்னில் சுருண்டது இஷாந்த் சர்மா அபார பந்து வீச்சு

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

டொமினிக்கா, ஜூலை. - 9  - இந்திய அணிக்கு எதிராக டொமினிக்காவில் நடைபெற்று வரும் 3 -வ து கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவு அணி முதல் இன்னிங் சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 204 ரன்னில் ஆட்டம் இழந் தது. இந்திய அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா கடந்த டெஸ்ட் போல இந்த டெஸ்டிலும் கலக்கினார். அவர் 5 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். ஹர்பஜன் சிங் மற்றும் பிரவீ ன் குமார் ஆகியோர் அவருக்குப் பக்கபலமாக பந்து வீசினர். 

மே.இ.தீவு அணி சார்பில், டிவைன் பிராவோ மற்றும் கார்ல்டன் பாக் இருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடி அரை சதம் அடித்தனர். இதனா ல் அந்த அணி 200 ரன்னைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 3 -வது மற் றும் கடைசி டெஸ்ட் போட்டி டொமினிக்கா தீவில் ரொசேயு நகரில் உள்ள வின்ட்சர் பார்க்கில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. 

2 -வது டெஸ்ட் போலவே இந்த டெஸ்டிலும் மழையால் ஆட்டம் பா திக்கப்பட்டது. முதல் நாள் ஆட்டத்தின் பெரும் பகுதியை மழை ஆக் கிரமித்தது. 2 -வது நாளின் துவக்கத்திலும், பிற்பகுதியிலும் மழை பெ ய்தது. 

முதல் நாளன்று முதல் இன்னிங்சைத் துவக்கிய மே.இ.தீவு அணி 2 - வ து நாளன்று இன்னிங்சை முடித்தது. அந்த அணி இறுதியில் 76.3 ஓவரி ல் அனைத்து விக்கெட்டையும் இழந்து 204 ரன்னை எடுத்தது. 

மே.இ.தீவு அணி சார்பில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்ல்ட ன் பாக் அதிகபட்சமாக, 79 பந்தில் 60 ரன்னை எடுத்தார். இதில் 6 பவு ண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் ஹர்பஜன் சிங் வீசி ய பந்தில் கிளீன் போல்டானார். 

அடுத்தபடியாக ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ 134 பந்தில் 50 ரன் னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் இஷாந் த் சர்மா வீசிய பந்தில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளி யேறினார். தவிர, சந்தர்பால் 23 ரன்னையும், கேப்டன் சம்மி 20 ரன் னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி ஒரு கட்டத்தில், 99 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தது. பின்பு பிராவோ மற்றும் கார்ல்டன் ஆகியோரது நிதானமான ஆட்டத்தால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டு கெளரவமான ஸ்கோரை எட்டியது. 

இந்திய அணியின் முன்னணி வீரரான இஷாந்த் சர்மா 77 ரன்னை விட்டுக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 22 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்டையம், ஹர்பஜன் சிங் 26 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்டும் எடுதத்னர். தவிர, முனாப்படேல் 1 விக்கெட் எடுத்தார். 

2 - வது நாள் பிற்பகுதியில் முதல் இன்னிங்சைத் துவக்கிய இந்திய அணி ஆட்டநேர முடிவில் 4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்னை எடுத்து இருந்தது. அப்போது, முகுந்த் 6 ரன்னுடனும், விஜய் 1 ரன்னு டனும் களத்தில் இருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்