முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா எதிர்ப்பு எதிரொலி இலங்கை 20 ஓவர் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைப்பு

சனிக்கிழமை, 9 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு, ஜூலை. - 9 - இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததன் எதிரொலியாக இலங்கையில் நடக்க இருந்த 20 -க்கு 20 கிரிக்கெட் போட்டியை இலங்கை கிரிக்கெட் வாரிய ம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்தது. இது பற்றிய விபரம் வருமாறு - இந்தியாவில் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் டி - 20 போட்டி போல இலங்கையில் எஸ். எல். பி.எல். என்ற 20 ஓவர் போட்டியை நடத்த முடிவு செய்து இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தன.
இந்தப் போட்டியிலும் ஐ.பி.எல். போல வெளிநாட்டு வீரர்களை சேர் த்து இருந்தனர். இந்தப் போட்டித் தொடர் வரும் 20 -ம் தேதி துவங்கு வதாக இருந்தது நினைவு கூறத்தக்கது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த பிரவீன் குமார், முனாப் படேல், திணேஷ் கார்த்திக், இர்பான் பதான், அஸ்வின், வல்தாட்டி உள்பட 12 வீரர்கள் கலந்து கொள்ள இருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் சங்கம் அனுமதி அளிக்கவில் லை. எஸ். எல். பி.எல். அமைப்பில் உள்ள ஒரு அணியுடன், சஸ்பெ ண்ட் செய்யப்பட்ட முன்னாள் சேர்மன் லலித் மோடிக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் வந்தன.
எனவே தான் இந்திய வீரர்களை பங்கேற்க கிரிக்கெட் சங்கம் அனுமதி கொடுக்கவில்லை. இது தொடர்பாக  இலங்கை கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இலங் கை 20 ஓவர் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் எஸ். எல். பி.எல். சங்க நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
இந்திய வீரர்கள் பங்கேற்காததால், இந்தப் போட்டியை அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்துவது என்று முடிவு செய்து தள்ளி வைத்தனர்.
அதனை அடுத்து உள்ளூர் வீரர்களைக் கொண்ட 5 அணிகளை உரு வாக் கி 20 ஓவர் போட்டியை இப்போது நடத்துவது என்றும், முடிவு செய்தனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் யாரும் பங்கேற்கமாட்டார் கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago