முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தானில் மழைக்கு மேலும் 12 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா

ஜெய்ப்பூர்,ஜூலை.- 10 - ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழைக்கு மேலும் 12 பேர் பலியாகி உள்ளனர். தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதியே கேரளாவில் தொடங்கி படிப்படியாக தீவிரமடைந்து கர்நாடகம், ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் பெய்யத்தொடங்கியுள்ளது. கேரளாவில் ஆரம்பத்தில் நல்ல மழை பெய்தது. அதன் பின்னர் கடந்த ஒரு மாத காலமாக பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லை. அதனால் ஏலக்காய் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆரம்பத்தில் நல்ல மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பெய்த பலத்த மழைக்கு பலர் பலியானார்கள். பல நாட்களுக்கு பிறகு மீண்டும் ராஜஸ்தானில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கி 10 பேர் பலியானார்கள் மேலும் கோதா என்ற இடத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 2 பேர் பலியானார்கள் என்று மாநில தலைநகர் ஜெய்பூருக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்து வரும் மழைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்