முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தம் மீது பா.ஜ. சொத்துக்குவிப்பு புகாரா? சி.பி.ஐ. விசாரணை கோரி குமாரசாமி உண்ணாவிரதம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,ஜூலை.- 10 - தம் மீது பாரதிய ஜனதா கூறியுள்ள சொத்துகுவிப்பு குற்றச்சாட்டை சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பெங்களூரில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகனும் முன்னாள் முதல்வமுருமான குமாரசாமி குடும்பத்தினர் முறையற்ற வகையில் சுமார் ஆயிரத்து 500 கோடி அளவுக்கு சொத்து சேர்த்திருப்பதாக கர்நாடக மாநில பா.ஜ.  கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என்பதை மக்கள் தெரிந்துகொள்ள சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் முதல்வர் குமாரசாமி நேற்று பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். முன்னதாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களுடன் குமாரசாமி ஊர்வலமாக உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு சென்றார்.
என் குடும்பத்தினர் மீது ரூ. ஆயிரத்து 500 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்துக்குவிப்பு புகாரை பாரதிய ஜனதா கூறியிருப்பது குறித்து நான் சி.பி.ஐ. விசாரணை கோரும் முறையானது முதல் முதலானது. என் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, என் தம்பியும் மாநில முன்னாள் வருவாய் துறை அமைச்சருமான எச்.எடி. ரேவண்ணா மற்றும் என் மீதும் குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கூறியிருப்பது எங்கள் குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதை களங்கம் படுத்தவே என்றும் குமாரசாமி கூறினார். நான் தூய்மையானவன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உண்மையானது மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே சி.பி.ஐ.விசாரணைக்கு கோருகிறேன். எனக்கு வாழக்கை முக்கியம் இல்லை. என் கவரவமும், கண்ணியமும்தான் முக்கியமாகும் என்றும் குமாரசாமி கூறினார். முதல்வர் எடியூரப்பா தனது உறவினர்களுக்கு சலுகை காட்டி நிலம் கையகப்படுத்தி கொடுத்ததை நான் ஏற்கனவே ஆதாரத்துடன் நிரூபித்துள்ளேன் என்றும் குமாரசாமி மேலும் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!