முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகள் பிரச்சினை: தெற்காசிய நாடுகளுக்கு பிரதமர் மன்மோகன் அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 11 - தீவிரவாதம் போன்ற முக்கிய பிரச்சினைகளை தீர்த்து கொள்ள தெற்காசிய நாடுகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.  சார்க் கூட்டமைப்பு நாடுகளின் நாடாளுமன்ற தலைவர்கள் 5 வது மாநாட்டை டெல்லியில் துவக்கி வைத்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற தலைவர்கள், நாடாளுமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதாவது,
தெற்காசிய நாடுகள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தங்களுக்குள்ளே தீர்த்து கொள்ள முன்வர வேண்டும். அண்மை காலமாக தெற்காசிய நாடுகளில் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. இது புற்று நோய் போன்றது. இது நாட்டின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தி விடும். எனவே இதில் கவனமாக இருந்து தீவிரவாதத்தை வேருடன் ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட முன்வர வேண்டும் என்றார். மாநாட்டில் பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் உட்பட சார்க் நாடுகளின் மக்களவை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago