முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு, மே.வங்க முதல்வர் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, ஜூலை - 11 - மாவோயிஸ்ட்களால் பாதிக்கப்பட்ட ஜங்கல்மஹால் பகுதிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்த வாரம் பயணம் செய்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டு நக்ஸலைட்டு தீவிரவாதிகள் அடிக்கடி அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை நடத்திவருகிறார்கள். மாவோயிஸ்ட்டுகளை அழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைச் செயல்களை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. மேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சி ஆட்சியை நிறுத்தி புதிதாக  அரசு அமைத்துள்ள திரிணமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் மாவோயிஸ்ட்டுகள் சில வாரங்களுக்கு ஜங்கல்மஹால் பகுதியில் மிகப்பெரிய வன்முறை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அந்த பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேற்கு வங்காள அரசு பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ரைட்டர்ஸ் பில்டிங்கில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டியிருந்தார். அப்போது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
நேற்று மீண்டும் இதேபோன்ற ஒரு முக்கிய கூட்டத்தை மம்தா பேனர்ஜி கூட்டியிருந்தார். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பேனர்ஜி, மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட ஜங்கல்மஹால் பகுதிக்கு தாம் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். வருகிற செவ்வாய்க்கிழமையோ அல்லது புதன்கிழமையோ தாம் ஜங்கல்மஹால் பகுதிக்கு செல்ல இருப்பதாக மம்தா பேனர்ஜி தெரிவித்தார். ஜங்கல்மஹால் பகுதியில் மூன்று இடங்களுக்கு செல்ல இருப்பதாகவும்,  ஜர்க்ராம், நயாகிராம் மற்றும் சாரங்கால் ஆகிய பகுதிகளில் தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாகவும் மம்தா தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago