முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா சாதனை

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      விளையாட்டு
Image Unavailable

 

டொமினிக்கா, ஜூலை. 12 - மேற்கு இந்தியத் தீவு மற்றும் இந்திய அணி டொமினிக்காவில் மோதி ய 3 -வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந் திய அணி 1 - 0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி சாதனை படை த்தது.  மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் 2 -வது இன்னிங்சில் சந்தர்பால் பொறுப்புடன் ஆடி சதம் அடித்தார். இதனால் அந்த அணி தோல்வியில் இருந்து தப்பியது. ஆட்டம் டிராவில் முடிந்தது.  

பின்பு 2 - வது இன்னிங்சை இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்னை எடுத்து இருந்த போது ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் இந் திய அணி வெற்றிக்காக போராட வில்லை. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி மேற்கு இந்தியத் தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் சம்மி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடியது. 

மே.இ.தீவு மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் 3 -வது போட்டி டொமினிக்கா தீவில் ரொசேயு நகரில் உள்ள வின்ட்சர் பார்க் கில் கடந்த 6 -ம் தேதி துவங்கி 10 -ம் தேதி முடிந்தது. 

முதலில் களம் இறங்கிய மே.இ.தீவு அணி முதல் இன்னிங்சில் 76.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 204 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில், கார்ல்டன் பாக் 60 ரன்னையும், பிராவோ 50 ரன் னையும், சந்தர்பால் 23 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில், இஷாந்த் சர்மா 77 ரன்னைக் கொடுத்து 5 விக் கெட் எடுத்தார். பிரவீன் குமார் 22 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஹர்பஜன் சிங் 26 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தா ர். தவிர, முனாப் படேல் 1 விக்கெட் எடுத்தார். 

பின்பு முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி 108.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 347 ரன்னை எடுத்தது. தோனி 74 ரன்னையும், முகுந்த் 62 ரன்னையும், ரெய்னா 50 ரன்னையும், லக்ஷ்ம ண் 56 ரன்னையும், கோக்லி 30 ரன்னையும் எடுத்தனர். 

மே.இ.தீவு அணி தரப்பில் எட்வர்ட்ஸ் 103 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். சம்மி 51 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பிஷூ 125 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, சந்தர்பா ல் 1 விக்கெட் எடுத்தார். 

மே.இ.தீவு அணி 2-வது இன்னிங்சில், 131.3 ஓவரில் 322 ரன்னை எடுத் தது. கே. எட்வர்ட்ஸ் 110 ரன்னையும், சந்தர்பால் 116 ரன்னையும் எடுத் தனர். ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டும், பிரவீன் குமார் மற்றும் ரெய்னா தலா 2 விக்கெட்டும், சர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர். 

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 180 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை மே.இ.தீவு அணி வைத்தது. அடுத்து களம் இற ங்கிய இந்திய அணி 32 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்னை எடு த்தது. 

இதனால் இந்த 3 - வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 1 - 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி சாதனை படைத்தது. மே.இ.தீவு சுற்று ப் பயணத்தில் இந்தியா ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றி உள்ளது. 

இந்திய அணி தரப்பில், துவக்க வீரர் விஜய் 78 பந்தில் 45 ரன்னை எடுத் தார். டிராவிட் 89 பந்தில் 34 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழ க்காமல் இருந்தார். லக்ஷ்மண் 8 ரன்னிலும், முகுந்த் பூஜ்யத்திலும் அவு ட்டானார்கள். 

மே.இ.தீவு சார்பில் ராம்பால் 31 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். எட்வர்ட்ஸ் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக சந்தர்பால் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக இஷாந்த் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்